சொந்த மகனை 8 ஆண்டுகளாக சித்திரவதை செய்த கொடூர தாயார்: அதிரவைக்கும் காரணம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் தாயார் ஒருவர் தமது சொகுசு வாழ்க்கைக்காக சொந்த மகனை சித்திரவதைக்கு உட்படுத்தி அரசிடம் இருந்து உதவித்தொகை பெற்றுள்ள சம்பவம் அம்பலமாகியுள்ளது.

லியுபோவ் கொரோட்கோவா என்ற அந்த தாயார் தமது 11 வயதேயான வாலேரி கண்டோரோவ் என்ற வளர்ப்பு மகனையே அரசு நிதி உதவிக்காக கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

கடந்த 8 ஆண்டுகளாக மேற்கொண்டு வந்த இந்த விவகாரம் தமது கணவருக்கு தெரியாமலும் அவர் பார்த்துக்கொண்டுள்ளார்.

சிறுவன் வாலேரியின் தற்போதைய நிலை மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக கூறும் மருத்துவர்கள், குறித்த சிறுவனின் உடல் எடையை குறைக்கும் வகையில் போதிய உணவு அளிக்க அவர் மறுத்துள்ளார் என தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி போதை மருந்துகளும் பயன்படுத்தியுள்ளார். இதனால் சிறுவனின் வயிறு உப்பிய நிலையில் காட்சி தந்துள்ளது. இது வயிறு தொடர்பான நோய் என கொரோட்கோவா அரசு அதிகாரிகளை நம்ப வைத்துள்ளார்.

இதனால் இதுவரை அவர் சுமார் 50,000 பவுண்டுகள் வரை நிதி உதவி பெற்றுள்ளதாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த 8 ஆண்டுகளில் பல்வேறு மருத்துவர்களிடம் சிறுவனை பரிசோதனைக்கு உட்படுத்திய கொரோட்கோவா, எந்த மருத்துவர்களாலும், சிறுவனின் நோயை உறுதிப்படுத்த முடியவில்லை என ஆவணங்களை அரசிடம் சமர்ப்பித்துள்ளார்.

இதனால் மாதம் குறிப்பிட்ட தொகை என அரசிடம் இருந்து உதவி பெற்று வந்துள்ளார் கொரோட்கோவா.

தற்போது இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்த நிலையில், இதுவரை அரசிடம் இருந்து உதவியாக பெற்ற மொத்த தொகையையும் திருப்பி செலுத்தவும், அபராதமாக 8,000 பவுண்டுகள் செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்போது குறித்த சிறுவன் அரசு சார்பு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவதாகவும், கொரோட்கோவாவிடம் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்