போரில் இருந்து தப்பி நியூசிலாந்தில் தஞ்சம்... தீவிரவாதியின் துப்பாக்கி குண்டுக்கு பலியான சோகம்: நெஞ்சை உலுக்கும் சம்பவம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

சோவியத் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போரில் இருந்து குடும்பத்துடன் தப்பிய நபர், நியூசிலாந்தில் தீவிரவாதியின் துப்பாக்கி குண்டுக்கு பலியான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஆப்கான் நாட்டவரான ஹாஜி தவுத் நபி கடந்த 1979 ஆம் ஆண்டு போருக்கு பயந்து தமது இளம் குடும்பத்துடன் நியூசிலாந்தில் தஞ்சம் புகுந்துள்ளார்.

சுமார் 40 ஆண்டுகளுக்கு பின்னர், கடந்த வெள்ளியன்று, தீவிரவாதியின் துப்பாக்கி குண்டுக்கு பலியாகியுள்ளார்.

கிறைஸ்ட்சர்ச் நகரில் அமைந்துள்ள அல் நூர் மசூதியில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் முதன் முதலாக அடையாளம் காணப்பட்டவரும் ஹாஜி தவுத் நபியே.

ஆப்கானில் இருந்து நியூசிலாந்துக்கு குடியேறும் அப்பாவிகளுக்கு உதவும் வகையில் தவுத் நபி அமைப்பு ஒன்றை உருவாக்கி செயல்படுத்தி வந்துள்ளார்.

சொந்த குடியிருப்பில் பாதுகாப்புடன் இருக்கும் மன நிலையை அந்த அப்பாவிகளிடம் உருவாக்கி வந்துள்ளார் தவுத் நபி என அவரது மகன் 43 வயதான ஒமர் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதியின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியானவர்களுடன் நபியின் சடலமும் சனிக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

வாழ்க்கையின் பெரும்பகுதியை நியூசிலாந்தில் செலவிட்ட நபியின் உடலும் இந்த மண்ணில் நல்லடக்கம் செய்யப்படுவதே சிறந்தது என ஒமர் கலங்கிய கண்களுடன் தெரிவித்துள்ளார்.

வெள்ளியன்று வழக்கமான தொழுகை நேரத்தில் அல் நூர் மற்றும் லின்வூட் மசூதிகளில் புகுந்த 28 வயது இளைஞன் Brenton Tarrant கண்மூடித்தனமாக சுட்டதில், நியூசிலாந்தின் தற்கால வரலாற்றில் மறக்கமுடியாத சம்பவமாக அது அமைந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்