நியூசிலாந்தின் ரியல் ஹீரோவுக்கு தேசிய விருது அறிவித்த அரசு

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

நியூசிலாந்து நாட்டின் Christchurch நகரில் இரு மசூதிகளில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் தீவிரவாதியிடமிருந்து மற்றவர்களை காப்பாற்றி தன்னுயிரை தியாகம் செய்த ரியல் ஹீரோவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானை பிறப்பிடமாக கொண்ட 49 வயதான Naeem Rashid நியூசிலாந்தில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

நியூசிலாந்து மசூதியில் துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றபோது Naeem, தனது உயிரை தியாகம் செய்து தன்னுடன் தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்களின் உயிரை காப்பாற்றியுள்ளார்.

இவர் தீவிரவாதியை தடுக்கும் வீடியோவும் வெளியானது. மேலும், இந்த சம்பவத்தில் இவரது 21 வயது மகனையும் இழந்துள்ளார். தன்னுயிரை தியாகம் செய்ததால் இவரை ரியல் ஹீரோ என நியூசிலாந்து மக்கள் மட்டுமின்றி இவரது சொந்த நாடான பாகிஸ்தான் நாட்டு மக்களும் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், இறந்துபோன இவரது குடும்பத்தினருக்கு தேவையான நிதியுதவிகளை செய்வதற்கு தயாராக இருப்பதாகவும், இவருக்கு பாகிஸ்தான் நாட்டின் தேசிய விருது வழங்கப்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்