அனைவரையும் திரும்பி பார்க்கக் வைத்த நியூசிலாந்து பிரதமரின் நெகிழ்ச்சி செயல்!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

இஸ்லாம் மதத்திற்கு மதிப்பு அளிக்கும் வகையில் நியூசிலாந்து பிரதமர், பாதிக்கப்பட்ட மக்களை கட்டி தழுவி தன்னுடைய ஆறுதலை தெரிவித்துள்ள சம்பவம் உலகம் முழுவதிலுமுள்ள பல பொதுமக்களாலும் பாராட்டப்பட்டு வருகிறது.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த பிரெண்டன் டிரான்ட்(28) என்கிற பயங்கரவாதி கடந்த வெள்ளிக்கிழமையன்று, நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் பகுதியிலுள்ள இரண்டு மசூதிகளில் கண்மூடித்தனமான துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினான்.

இதில் சிறுகுழந்தைகள், கைதேர்ந்த இதய அறுவை சிகிச்சை மருத்துவர் மற்றும் சிறந்ததொரு விளையாட்டுவீரர் உட்பட 50 அப்பாவி பொதுமக்கள் பரிதாபமாக பலியாகினர். மேலும் 40க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிரெண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.

இந்த நிலையில் தாக்குதல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக அந்நாட்டு பிரதமர், போர்க்கால நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன், இஸ்லாத்திற்கு மதிப்பு அளிக்கும் வகையிலும் முஸ்லிம் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டதற்கு அடையாளமாகவும் தலையில் துணி அணிந்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

கில்பிரினி மசூதிக்கு விஜயம் செய்த அவர், அங்கு பாதிக்கப்பட்ட பலரையும் சந்தித்து கட்டியணைத்து ஆறுதல் தெரிவித்தார். அதோடு அல்லாமல் மதத்தலைவர்களுடனும் சந்திப்பு நிகழ்த்தியுள்ளார்.

பிரதமர் ஜெசிந்தாவின் இந்த செயலானது உலகநாடுகளிடையே உள்ள மக்களிடம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்