நியூசிலாந்து சம்பவத்தில் தீவிரவாதி எந்தவகை துப்பாக்கியை பயன்படுத்தினான்? வெளியான தகவல்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

நியூசிலாந்து துப்பாக்கி சூடு சம்பவத்தில் முக்கிய தீவிரவாதியான Brenton Tarrant எவ்வாறு சக்திவாய்ந்த இராணுவ பாணியிலான ஆயுதங்களை பயன்படுத்தினான் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

தீவிரவாதி 2017 ஆம் ஆண்டு துப்பாக்கி உரிமம் பெற்றுள்ளார். உரிமம் பெற்றது முதல் இரண்டு semiautomatic ஆயுதங்கள், இரண்டு சாதாரண சிறிய துப்பாக்கிகள் மற்றும் lever-action துப்பாக்கி பயன்படுத்தியுள்ளான்.

இந்த துப்பாக்கிகளை வைத்து தன்னை பழக்கப்படுத்திக்கொண்ட Brenton, துப்பாக்கி சூடு சம்பவத்தின்போது, இரண்டு துப்பாக்கிகள் மற்றும் AR-15 ரக துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளார். AR-15 என்ற இந்த துப்பாக்கி அந்நாட்டு மக்கள் பயன்படுத்தும் துப்பாக்கி ஆகும்.

ஆனால், தீவிரவாதி பயன்படுத்திய குறித்த துப்பாக்கி நியூசிலாந்து நாட்டில் பயன்படுத்தியதை இதுவரை பார்த்ததில்லை என பிரதமர் தெரிவித்துள்ளார்.

தற்போது, Brenton Tarrant பயன்படுத்திய துப்பாக்கி 2017 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் உள்ள மசூதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டின்போது பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி என தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதலின்போது சுமார் 57 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்