நியூசிலாந்து துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

நியூசிலாந்து நாட்டில் கிறைஸ்ட்சர்ச் நகரின் மையப்பகுதியில் உள்ள அல் நூர் மசூதியிலும், லின்உட் மஸ்ஜித் மசூதியிலும் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனிடையே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.

இந்த சம்பவத்தில் 40பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் சிகிச்சை பலனின்றி சிலர் இறந்துபோன நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 50ஐ நெருங்கியுள்ளது.

தீவிரவாத ச்ம்பவத்தின் முக்கிய குற்றவாளி Brenton Tarrant சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தியுள்ளது நியூசிலாந்து அரசு.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்