போயிங் மேக்ஸ் ரக விமானம் விபத்தில் சிக்க இதுதான் காரணமா? வெளியான தகவல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

போயிங் 737 மேக்ஸ் ரக விமானத்தில் மென்பொருள் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டும் அதை சரிசெய்ய தாமதம் ஏற்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தோனேசியா, எத்தியோபிய நாடுகளில் போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் விபத்தில் சிக்கியதில் மொத்தமாக 346 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஆண்டே போயிங் நிறுவனம் தனது 737 மேக்ஸ் விமானத்தில் மென்பொருள் கோளாறு இருப்பதைக் கண்டறிந்து,

சவுத்வெஸ்ட் மற்றும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனங்களின் விமானிகளை அழைத்து ஆலோசனை மேண்கொண்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து 6 வாரங்களில் மென்பொருளை மேம்படுத்துவதாகக் கடந்த ஆண்டு போயிங் கூறியதை நம்பி காத்திருந்த நிலையில்தான் எத்தியோப்பிய விமான விபத்து நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்