கிறிஸ்ட் சர்ச் மசூதி தீவிரவாத துப்பாக்கிச் சூட்டில் இந்தியாவின் ஹைதராபாத் நகரை சேர்ந்த 31 வயது இளைஞர் ஒருவரும் பலியாகி இருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
நியூஸிலாந்தில் கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள அல்நூர் மசூதி மற்றும் லின்வுடன் பகுதியில் உள்ள மசூதிகளில் வெள்ளிக்கிழமை அன்று இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அங்கு வந்த தீவிரவாதி ஒருவன் தாம் வைத்திருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுடத்தொடங்கினான்.
இதில் சம்பவயிடத்திலேயே 49 பேர் பலியாகினர். ஏராளமானவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்தத் துப்பாக்கிச் சூட்டில் கைது செய்யப்பட்டுள்ள முக்கியக் குற்றவாளியான பிரெண்டன் டாரன்ட், கிறிஸ்ட் சர்ச் மாவட்ட நீதிமன்றத்தில் இன்று சனிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்த தாக்குதலில் இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தின் ஹைதரபாத் நகரைச் சேர்ந்த 31 வயது பர்ஹஜ் அஸ்ஸன் என்ற இளைஞர் காணாமல் போனதாக தகவல் வெளியாகின.
நியூசிலாந்தில் ஐடி மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்த அவர் சம்பவம் நடந்தநேரத்தில் அங்கு இருந்துள்ளார். அதன் பிறகு அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்தநிலையில் அவர் உயிரிழந்துள்ளதை நியூசிலாந்து பொலிசார் தற்போது உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து பர்ஹஜின் சகோதரரர் காஸிப், நியூசிலாந்தில் நடந்த தாக்குதலில் எனது சகோதரர் உயிரிந்துள்ளதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது என வருத்தமுடன் தெரிவித்துள்ளார்.