அன்று நியூசிலாந்துக்கு அகதியாய் வந்தவர்.... இன்று கொல்லப்பட்ட சோகம்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

நியூசிலாந்தின் Christchurch நகரில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 49 பேர் உயிரிழந்துள்ளனர், 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்த முதல் முஸ்லீம் கொல்லப்பட்டுள்ளதாக அவர்களது மகன்கள் புகைப்படத்துடன் தெரிவித்துள்ளனர்.

71 வயதான Haji Daoud Nabi என்பவர் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து 1977 ஆம் ஆண்டு நியூசிலாந்து நாட்டுக்கு அகதியாய் வந்து அந்நாட்டின் குடிமகன் ஆனவர். இவர்தான் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்த முதல் முஸ்லீம் நபர் ஆவார்.

இவருக்கு 5 பிள்ளைகள் உள்ளனர். தங்களது தந்தையின் மரணத்தை உறுதிப்படுத்திய இவரது இரண்டு மகன்கள், நீதிமன்றத்திற்கு வெளியே தந்தையின் புகைப்படத்தை வைத்து போராட்டம் செய்துள்ளனர்.

எங்கள் வாழ்க்கையின் மோசமான வெள்ளிக்கிழமை இது. வழக்கம்போல மசூதிக்கு சென்ற அவர் திரும்பிவரவில்லை. மூர்க்கத்தனமாக நடைபெற்ற இந்த சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என அவரது மகன்கள் கூறியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்