நியூஸிலாந்து துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களுக்காக உலகமே திரண்டு அஞ்சலி: நெகிழ்ச்சி புகைப்படங்கள்

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

நியூஸிலாந்து துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களுக்கு உலகம் முழுவதிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி இரங்கல் தெரிவிக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

லண்டன், ஹெல்சின்ங்கி மற்றும் பிரஸ்ஸல்ஸ் போன்ற இடங்களில் ஏராளமானோர் கூடி உயிரிழந்த 49 பேருக்கும் தங்கள் அஞ்சலியை செலுத்தினார்கள்.

லண்டனின் Hyde Parkஇல் பூக்களுடனும் மெழுகுவர்த்திளுடனும் அமைதியான முறையில் மக்கள் தங்கள் அஞ்சலியை செலுத்தினர்.

பிரான்சின் பாரீஸில் அமைந்துள்ள ஈபில் கோபுரத்தின் விளக்குகள் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அணைக்கப்பட்டன.

டொராண்டோவில் கூடிய மக்கள், பதாகைகளுடன் தங்கள் இரங்கலை தெரிவித்துக் கொண்டார்கள்.

பிரஸ்ஸல்சில் நீளமான ஒரு காகிதத்தில் மக்கள் தங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொண்டதோடு மெழுகுவர்த்திகளையும் ஏற்றி தங்கள் அஞ்சலியை செலுத்தினார்கள்.

ஹெல்சிங்கியில் அஞ்சலி செலுத்தும் விதமாக Finlandia Hall நீல நிற விளக்குகளுடன் ஒளிர்ந்தது.

அவுஸ்திரேலியாவில், சிட்னியில் உள்ள Lakemba மசூதியில் மக்கள் கூடி தங்கள் அஞ்சலியை செலுத்தினார்கள்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers