மனைவியின் காதல் மீது சந்தேகம்... கணவன் செய்த விபரீத காரியம்: பதற வைக்கும் வீடியோ காட்சி

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

சீனாவில் மனைவியின் காதலை சோதனை செய்வதற்காக, சாலைக்கு நடுவே நின்று கணவன் செய்த விபரீத செயலின் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

சீனாவின் சென் ஜியாங் மாகாணத்தை சேர்ந்த பான் என்பவருக்கு தன்னுடைய மனைவியின் காதல் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் மது போதையில் இருந்த பான், திடீரென அதிவேகமாக கார்கள் சென்றுகொண்டிருந்த சாலையின் நடுவே நின்றுள்ளார்.

இதனை பார்த்த பதறிப்போன மனைவி, அவரை வெளியில் இழுத்து காப்பாற்றுவதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

ஆனால் அவருடைய பேச்சை கண்டுகொள்ளாமல் பானும் சாலையின் நடுவே மீண்டும் மீண்டும் ஓடிச்சென்று நின்று கொண்டார். இந்த சம்பவமானது தொடர்ந்து 40 நிமிடங்கள் நடைபெற்றுள்ளது.

இதன் இறுதியில் வேகமாக வந்த கார் ஒன்று பான் மீது மோதியுள்ளது. இதில் காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து பானிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பேசிய அவர், நேற்று எனக்கும் என்னுடைய மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே கடைக்கு சென்று மது அருந்திவிட்டு மீண்டும் சண்டையிட்டேன்.

"அப்போது என்னுடைய மனைவியின் காதலை நான் சோதனை செய்ய முடிவெடுத்தேன். சாலையில் நடுவே சென்று நிற்கும்போது அவள் என்னை காப்பாற்ற முயன்றால், காதல் உண்மையானது என்று அர்த்தம். அப்படி வரவில்லையென்றால் காதல் இல்லை என்று அர்த்தம்" என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்