நியூசிலாந்து தீவிரவாத தாக்குதல்... மாயமான ஆசிய இளைஞரின் புகைப்படம் வெளியானது: தவிக்கும் குடும்பம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

நியூஸிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் இரு மசூதிகளில் நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச்சூட்டில் 49 பேர் கொல்லப்பட்ட நிலையில் இந்தியர் ஒருவர் மாயமானதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் ஐதராபாத் நகரில் குடியிருக்கும் Farhaj Ashan என்பவரது குடும்பமே தற்போது தங்களது தவிப்பை வெளியிட்டுள்ளனர்.

குறித்த நபர் நியூசிலாந்தில் அவரது குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள நூர் மசூதியில் தொழுகைக்காக சென்றுள்ளார் என்ற தகவல் மட்டுமே கடைசியாக அவரிடம் இருந்து குடும்பத்தாருக்கு கிடைத்துள்ளது.

நியூசிலாந்து தீவிரவாத தாக்குதலில் Farhaj Ashan உள்ளிட்ட 9 இந்தியர்கள் இதுவரை மாயமாகியுள்ளதாகவும், அவர்கள் தொடர்பில் உறுதியான எந்த தகவலும் வெளியாகவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

மென்பொருள் பொறியாளரான Farhaj Ashan தமது மனைவி, 3 வயது மகள் மற்றும் 6 மாதமேயான மகன் ஆகியோருடன் கிறிஸ்ட்சர்ச் நகரில் குடியிருந்து வருகிறார்.

தீவிரவாதிகளால் குறிவைக்கப்பட்ட நூர் மசூதியிலேயே Farhaj Ashan தொழுகைக்கு சென்றுள்ளார்.

அனைவருமே திரும்பியுள்ளனர், ஆனால் இதுவரை எனது மகன் என்ன ஆனார் என்றே தெரியவில்லை என கண்ணீருடன் இந்திய அதிகாரிகளை நாடியுள்ளார் Farhaj Ashan-ன் தந்தை.

இதனிடையே நியூசிலாந்தில் உள்ள இந்திய தூதர் சஞ்சீவ் கோஹ்லி, Farhaj Ashan உள்ளிட்ட 9 இந்தியர்கள் தொடர்பில் எந்த தகவலும் அந்த நாட்டு அரசாங்கம் உறுதி செய்யவில்லை என தகவல் வெளியிட்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers