157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானத்தின் மதிப்பு எத்தனை மில்லியன் டொலர் தெரியுமா?

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

எத்தியோப்பியாவில் 737 Max 8 போயிங் ரக விமானம் விபத்துக்குள்ளானதையடுத்து இதனை பயன்படுத்தும் விமான நிறுவனங்கள் தொடர்ந்து போயிங் ரக விமானத்தை பாதுகாப்பு காரணம் கருதி பயன்படுத்துவது குறித்து பரிசீலனை செய்து வருகின்றன.

அமெரிக்காவின் Boeing Commercial Airplanes நிறுவனத்தால் 2016 ஆம் ஆண்டு சந்தையில் அறிமுக்கப்படுத்தப்பட்டது இந்த விமானம் தொடர்ந்து பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

போயிங் 737 MAX விமானி குறைந்தபட்சம் 1,000 மணிநேர விமான பயண அனுபவத்தை கொண்டிருக்க வேண்டும், அதே நேரத்தில் இணை விமானி குறைந்தபட்சம் 500 மணிநேர அனுபவம் இருக்க வேண்டும்.

சீனா, எத்தியோப்பியா, இந்தோனேசியா மற்றும் கேமன் தீவுகள் ஆகிய நான்கு நாடுகளுக்கான போயிங் பங்குகள் கிட்டத்தட்ட 10 சதவிகிதம் அமெரிக்காவின் ஆரம்ப வர்த்தகத்தில் சரிவைச் சந்தித்துள்ளன.

737 Max 8 போயிங் விமானத்தின் மதிப்பு $121.6 மில்லியன் டொலர் ஆகும். சுமார் 5,000 விமானங்கள் உருவாக்க மதிப்பிடப்பட்டிருந்த நிலையில் தற்போது விபத்து நடந்துள்ளதால், பணிகள் தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...