இவ்வளவு அஜாக்கிரதையா? விமானத்தில் பயணம் செய்த பெண் சொன்ன அதிர்ச்சி தகவல்! வைரலாகும் வீடியோ

Report Print Santhan in ஏனைய நாடுகள்

சவுதி அரேபியாவில் பெண் ஒருவர் தன் குழந்தையை விமான நிலையத்தில் மறந்து விட்டு வந்துவிட்டதாக கூறி, மீண்டும் விமானத்தை திருப்பும் படி கதறியுள்ளார்.

சவுதி அரேபியாவின் Jeddah’s King Abdulaziz விமானநிலையத்திலிருந்து மலேசியாவின் குலாலம்பூருக்கு Saudi Arabian Airlines பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றுள்ளது.

அப்போது இந்த விமானத்தில் பயணம் செய்த பெண் ஒருவர் திடீரென்று அதிர்ச்சியில் அங்கிருந்த விமான ஊழியரிடம் நான் என் குழந்தையை விமான நிலையத்தில் மறந்து விட்டுவந்துவிட்டேன், மீண்டும் விமானத்தை குறித்த விமானநிலையத்திற்கு திருப்பும் படி கூறியுள்ளார்.

இதனால் இந்த தகவல் விமானிக்கு தெரிவிக்கப்பட்டதால், விமானி கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு விவரத்தை கூறியுள்ளார்.

பின்னர் மற்ற பாதுகாப்பு நடவடிக்கை, வேறு விமானம் தரை இறங்கும் நேரம் என அனைத்தையும் சிறிது நேரம் மாற்றி அமைத்து, விமானத்தை தரை இறக்க அனுமதி கொடுத்து உள்ளனர்.

விமானி கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பேசிய வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவைக் கண்ட இணையவாசிகள், பொருட்களை மறந்து வைத்து வருவார்கள் என்று கேள்விபட்டிருக்கிறோம், ஆனால் இவர் என்னவோ குழந்தையையே மறந்துவிட்டாரே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers