157 பேருடன் விழுந்து நொறுங்கிய பயணிகள் விமானத்தின் இறுதி நிமிட வீடியோ வெளியானது! கண்கலங்கும் இணையவாசிகள்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

157 பேருடன் விழுந்து நொறுங்கிய பயணிகள் விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன் எடுக்கப்பட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Ethiopian Airlines Boeing 737 பயணிகள் விமானம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை காலை எத்தியோப்பியாவின் தலைநகர் Addis Ababa-விலிருந்து கென்யாவின் Nairobi நகருக்கு 149 பயணிகள் மற்றும் 8 விமான ஊழியர்களுடன் புறப்பட்டுச் சென்றது.

அப்போது விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலே கீழே விழுந்து நொறுங்கி விபத்தில் சிக்கியது. இதனால் விமானத்தில் இருந்த அனைவரும் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து இறந்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள், அவர்களின் விவரம் மற்றும் புகைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி கொண்டிருக்கிறது.

உறவினர்களை இழந்த சோகத்தில் பலர் எத்தியோப்பியா விமான நிலையத்தில் கதறி அழுத புகைப்படங்களுக் வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைத்தது.

இந்நிலையில் விபத்தில் சிக்கிய பயணிகள் விமானத்தின் கடைசி நிமிட வீடியோ வெளியாகியுள்ளது. அதில் பயணிகள் முகத்தில் மாஸ்க் அணிந்திருக்கின்றனர்.

இந்த வீடியோவைக் கண்ட இணையவாசிகள் உயிரிழந்தவர்களின் கடைசி நிமிடம் என கண்கலங்கும் வகையில் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers