157 பேருடன் விழுந்து நொறுங்கிய விமானம்: விமானத்தை ஓட்டிய விமானி யார்? வெளியான தகவல்கள்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

போயிங் 737 விமான விபத்துக்கான உண்மையான காரணம் என்ன என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் விமானம் இயக்கும் போது விமானி சில பிரச்னைகளைச் சந்தித்ததாக எத்தியோப்பியா ஏர்லைன் தலைமை செயல் அதிகாரி டெவோல்டி ஜிப்ரெமரியம் (Tewolde Gebre-Mariam) தெரிவித்துள்ளார்.

இந்த விமான விபத்தில் இதில் பயணம் செய்த 157 பேரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் விமானியின் பெயர் மற்றும் அவரது பணித்திறமை குறித்து எத்தியோப்பியா ஏர்லைன் தலைமை செயல் அதிகாரி கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, எங்கள் ஏர்லைன்ஸின் மிகவும் அனுபவம் வாய்ந்த சீனியர் ஆவார். அவரது பெயர் Yared Getachew. எங்கள் விமானத்தில் 8,000 மணிநேரங்களுக்கு மேலாக பாராட்டத்தக்க வகையில் செயல்திறன் கொண்டவர்.

கென்ய பெற்றோருக்கு பிறந்த இவர், 2010 ஆம் ஆண்டு எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார். தனது செயல்திறன் மூலம் 2017 ஆம் ஆண்டு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers