225 பேருடன் கிளம்பிய விமானம்! உள்ளே வெடிகுண்டு இருப்பதாக விமானிக்கு வந்த தகவலால் அவசர தரையிறக்கம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

ரஷ்ய விமானம் ஒன்றில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் வந்ததையடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

விமானமானது Azerbaijan நாட்டின் தலைநகர் Bakuவில் தரையிறக்கப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Bahrainல் இருந்து 225 பயணிகளுடன் கிளம்பிய விமானம் ரஷ்யாவின் மாஸ்கோவுக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக விமானிக்கு தகவல் வந்ததையடுத்தே அவர் விமானத்தை பாதுகாப்பாக Bakuவில் தரையிறக்கினார்.

இதன்பின்னர் விமானத்தில் இருந்த பயணிகள் உடனடியாக கீழே இறக்கப்பட்டதாக Heydar Aliyev சர்வதேச விமானநிலையத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் விமானத்தின் உள்ளே சந்தேகப்படும்படியான பொருட்கள் ஏதும் கிடைக்கவில்லை என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers