கிம் ஜோங் உன் சகோதரர் கொலைவழக்கில் அதிரடி திருப்பம்.... முக்கிய குற்றவாளி விடுவிப்பு: வெளியான பின்னணி

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் சகோதரர் கிம் ஜோங் நாம் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை மலேசிய நீதிமன்றம் விடுவித்துள்ளது.

குறித்த குற்றவாளி மீதான கொலை வழக்கை விலக்கிக்கொண்டதை அடுத்தே அந்த நபரை நீதிமன்றம் விடுவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அவர் மீதான கொலைக் குற்றமானது கைவிடப்பட்டதன் காரணம் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

மட்டுமின்றி நீதிமன்றம் அவரை விடுவித்த பின்னர், இந்தோனேசிய அரசாங்க அதிகாரி ஒருவரின் வாகனத்தில் அவர் புறப்பட்டு செல்வதை ஊடகங்கள் உறுதி செய்துள்ளன.

தன் மீதான கொலைக்குற்றம் கைவிடப்பட்டதில் அவர் மிகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளதாகவும், கண்கலங்கியபடி நன்றி தெரிவித்ததாகவும், அவரது வழக்குரைஞர் Gooi Soon Seng தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தோனேசியரான 27 வயது Siti Aisyah என்ற பெண்மணியுடன், கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வியட்நாம் நாட்டவரான 30 வயது Doan Thi Huong சிறையில் இருந்து வருகிறார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் திகதி Siti Aisyah என்ற இந்தோனேசிய பெண் உள்ளிட்ட கும்பல் ஒன்று மலேசிய விமான நிலையத்தில் வைத்து வடகொரிய தலைவர் கிம் ஜோங் இன் சகோதரர் கிம் ஜொங் நாம் என்பவரை கொடிய நச்சுத் துகளை சுவாசிக்க வைத்து கொலை செய்தனர்.

கிம் ஜோங் நாம், வடகொரியாவை விட்டு வெளியேற முடிவு செய்து மலேசியாவில் சென்றதாக கூறப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்னர், கொல்லப்பட்ட கிம் ஜோங் நாம் இன் மகன் தமது தந்தையின் கொலைக்கு பழிவாங்குவேன் என எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers