இரவு விடுதியில் புகுந்த கும்பல் சரமாரி துப்பாக்கிச் சூடு: 14 பேர் மரணம், பலர் காயம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
234Shares

மெக்சிக்கோ நாட்டில் இரவு விடுதியில் புகுந்த கும்பல் ஒன்று சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் 14 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.

நள்ளிரவை கடந்த நிலையில் Salamanca பகுதியில் அமைந்துள்ள La Playa இரவு விடுதிக்குள் கும்பல் ஒன்று அத்துமீறி நுழைந்துள்ளது.

பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் துப்பாக்கியால் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக சுட்டுள்ளனர். இதில் 14 பேர் சம்பவயிடத்தில் பரிதாபமாக கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் 7 பேர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். இதனிடையே துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து ஏற்பட்ட கூச்சல் குழப்பதின் இடையே அந்த கும்பல் மாயமானதாக தெரியவந்துள்ளது.

மெக்சிக்கோ பொலிசாரும் ராணுவமும் குறித்த பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர்.

அப்பகுதியில் விரிவான தேடுதல் நடத்தியுள்ளனர். இருப்பினும் அந்த கும்பல் தொடர்பில் எவ்வித தகவலும் சிக்கவில்லை என்றே தெரியவந்துள்ளது.

Salamanca பகுதியை பொறுத்தமட்டில் சுமார் 143,000 பேர் குடியிருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்