20-வது மாடியில் இருந்து ஆடையின்றி குதித்த இளம் மொடல்... சிக்கிய கோடீஸ்வர தம்பதி: வெளிவரும் பகீர் பின்னணி

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
529Shares

மலேசியாவில் கோடீஸ்வர தம்பதிகளுடன் இயற்கைக்கு மீறிய உறவில் ஈடுபட்டு, பின்னர் தற்கொலை செய்து கொண்டதாக கூறும் நெதர்லாந்து இளம் மொடலில் மரணத்தில் பகீர் பின்னணி வெளியாகியுள்ளது.

குறித்த விவகாரம் தொடர்பில் மலேசிய அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாடியில் இருந்து குதிக்கும் முன்னரே அவர் இறந்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் சதிச்செயல்கள் ஏதும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி கோலாலம்பூரில் உள்ள முக்கிய பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 6-வது மாடியின் தரைத்தளத்தில் இருந்து நிர்வாண நிலையில் இளம் மொடல் இவானா சிமித்தின் சடலம் மீட்கப்பட்டது.

18 வயதான இவானா, மலேசியாவில் அமடோ ஜான்சன்(45) என்ற அமெரிக்க கோடீஸ்வரருக்கு சொந்தமான குடியிருப்பில் பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.

இதில் போதை மருந்து அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது எனவும், அமடோ ஜான்சனின், மனைவி மற்றும் இவானா ஆகிய மூவரும் இயற்கைக்கு மீறிய பாலியல் உறவு வைத்துக் கொண்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது.

இந்த வழக்கை விசாரித்துவரும் மலேசிய அதிகாரிகள், குறித்த மொடல் இறப்பதற்கு முன்னர் கைகலப்பில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளதாகவும்,

மொடலின் பின்னந்தலையில் காயம் ஏற்பட்டதன் அடையாளம் இருந்ததாகவும், மட்டுமின்றி மொடலின் நகக்கண்ணில் அமடோ ஜான்சனின் டி.என்.ஏ சிக்கியிருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இருப்பினும் இதில் குற்றச்செயலில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் ஏதும் இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இன்று வெளியான இந்த அறிக்கையால் தங்கள் கோபத்தை வெளியிட்ட மொடலின் உறவினர்கள், இறந்தவர் எவ்வாறு மாடியில் இருந்து குதிக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

மட்டுமின்றி, சம்பவத்தன்று மலேசியாவில் என்ன நடந்தது என்பது தொடர்பில் தங்களுக்கு உண்மை தெரியவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மொடல் விவகாரம் விபத்தாக இருக்கலாம் அல்லது தற்கொலை என கோலாலம்பூர் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் இவானாவின் குடும்பத்தினர் இது ஒரு கொலை என்றே நம்புகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்