வீட்டிற்கு வந்த நபரை கண்டம் துண்டமாக வெட்டி உடலை சூப் வைத்து குடித்த தந்தை-மகன்! அதிர்ச்சி சம்பவம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்
251Shares

உக்ரைனில் தாய் மற்றும் மகன் முன்னாள் பொலிஸ் அதிகாரியை கொலை செய்து, உடலை சூப் வைத்து குடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைனைச் சேர்ந்தவர் Maksim Kostyukov. 41 வயதான இவருக்கு Yaroslav என்ற 20 வயதில் மகன் உள்ளார்.

இந்நிலையில் இவர்களின் வீட்டிற்கு Maksim Kostyukov-வின் நண்பரும் முன்னால் பொலிஸ் அதிகாரியுமான Evgeny Petrov ஏதோ விருந்து ஒன்றிற்கு வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது தந்தை மற்றும் மகன் Evgeny Petrov-ஐ கொடூரமாக கொலை செய்து, உடலை வெட்டி பாதியை பிரிட்ஜின் உள்ளேயும், மீதியை சூப் வைத்தும் குடித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி இன்னும் சில உடல் பாகங்களை அங்கிருக்கும் குடியிருப்பு அருகில் இருக்கும் பகுதியில் மூடி மறைத்துள்ளனர்.

இந்த தகவல் பொலிசாருக்கு தெரியவர அவர்கள் இருவரையும் பொலிசார் கைது செய்து செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஆனால் அவர்கள் ஏன் இப்படி கொலை செய்தார்கள் என்பது குறித்த தகவல் தொடர் விசாரணையில் தெரியவரும் என்று பொலிசார் கூறியுள்ளனர்.

மேலும் அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் ஒன்று Evgeny Petrov-ஐ கொலை செய்தவுடன் சில உடல பாகங்களை அவர்கள் குடியிருந்த குடியிருப்பின் பால்கனியில் இருக்கும் பாக்ஸ் ஒன்றில் மறைத்து வைத்திருந்ததாகவும் கூறுகின்றன.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய அவரது மகன் Yaroslav, என்னுடைய தந்தை அவரது தொண்டையை முதலில் வெட்டினார். அதன் பின் அவரது மார்பு பகுதியில் வெட்டியதாக கூறியுள்ளான்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்