16 வருட சிறைவாசத்திற்கு பின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் கொன்றுகுவித்த நபர்: அதிர்ச்சி பின்னணி

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்
625Shares

துருக்கியில் 16 வருட சிறைத்தண்டனைக்கு பின் வீடு திரும்பிய நபர், ஒட்டுமொத்த குடும்பத்தையும் கொலை செய்துவிட்டு மீண்டும் சிறைக்கு திரும்பியிருக்கும் கொடூர சம்பவம் நடந்தேறியிருக்கிறது.

துருக்கியை சேர்ந்த சினாய் கர்கன் என்கிற நபர் பணம் தொடர்பாக தன்னுடைய சகோதரர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர்களை கொலை செய்துள்ளார்.

இதற்காக கைது செய்யப்பட்ட அவர், 16 வருட சிறைவாசத்திற்கு பின் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டார்.

தன்னுடைய 16 மற்றும் 21 வயதுடைய தன்னுடைய மகன்கள் கோக்ஷல், கோக்மென் உடன் வீட்டில் தங்கியிருந்த சினாய், மூன்று நாட்கள் கழித்து திடீரென அவர்கள் இருவரையும் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளார்.

அதன்பிறகு நேராக தன்னுடைய மைத்துனரின் வீட்டிற்கு சென்று, அவரையும், அவருடைய மகனையும் சுட்டுக்கொலை செய்துள்ளார். பின்னர் எஞ்சியிருந்த தன்னுடைய சகோதரனின் வீட்டிற்கு சென்றவர், காரில் வைத்தே அவரை சுட்டுகொன்றுவிட்டு தப்பியுள்ளார்.

இதற்கிடையில் தகவலறிந்து வந்த பொலிஸார், காரின் என்னை வைத்து குற்றவாளியை விரட்ட ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் பொலிஸார் துரத்துவதை தெரிந்துகொண்ட சினாய், அங்கிருந்த தப்புவதற்காக ஓடும்காரில் இருந்து வெளியில் குதித்துள்ளார்.

அப்போது அவரை பிடித்த பொலிஸார், கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கையில், சிறையில் இருந்த சமயத்தில் தன்னுடைய மனைவியை சரியாக கவனித்துக்கொள்ளாததால் தான் கொலை செய்தேன் என கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேசமயம் சினாய் மனைவி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்