ரூ. 10 லட்சத்துக்கு நான் விற்கப்பட்டேன்.. கதறும் திருநங்கை... திடுக்கிடும் பின்னணி

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

பாகிஸ்தானை சேர்ந்த திருநங்கை ஒருவர் தன்னை சிலர் ரூ. 10 லட்சத்துக்கு விற்றுவிட்டதாக கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார்.

ஜீலும் மாகாணத்தை சேர்ந்தவர் நீலம். திருநங்கையான இவர் பொலிசில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

புகார் மனுவில், ஹஜி அன்வர் என்ற திருநங்கை என்னை சிலரிடம் ரூ 10 லட்சத்துக்கு விற்றுவிட்டார்.

வாட்ஸ் அப் குரூப்பில் வந்த வீடியோ மூலமே இதை நான் தெரிந்து கொண்டேன்.

எங்கள் பகுதியில் உள்ள திருநங்கைகள் அமைப்பை சேர்ந்த அன்வர், ஸ்டாம்ப் பேப்பரில் என்னுடைய கையெழுத்தை போலியாக போட்டு விட்டு என்னை விற்றுள்ளார்.

நான் விற்கப்பட்டதையடுத்து சிலர் தினமும் என் வீட்டுக்கு வந்து என்னை கடத்த முயன்றனர்.

என்னை போலவே நாகேயன் என்ற திருநங்கையும் சமீபத்தில் பணத்துக்காக விற்பட்டுள்ளார்.

இதில் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து என்னை காப்பாற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் இதில் தொடர்புடைய இருவரை கைது செய்துள்ளனர். தொடர்ந்து இது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்