வீட்டில் சிங்கங்களை வளர்த்து வந்த இளைஞருக்கு நேர்ந்த கதி! அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

செக்குடியரசில் செல்லப்பிராணியாக சிங்கத்தை ஒருவர் வளர்த்து வந்த நிலையில், அவரை அந்த சிங்கம் கடித்து குதறி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செக்குடியரசின் Zlín மாகாணத்தில் இருக்கும் Zdechov கிராமத்தில் 33 வயது மதிக்கத்தக்க மைக்கேல் பிராசெக் என்ற நபர் ஆண் சிங்கம், பெண் சிங்கம் என இரண்டு சிங்கங்களை இனப் பெருக்கம் செய்யும் நோக்கில், தன் வீட்டில் வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த செவ்வாய்கிழமை அவர் வளர்த்து வந்த சிங்கம் கடித்து குதறி கொன்றுவிட்டதாக வன அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனால் அங்கு விரைந்து வந்த போது, அவர் உடலின் அருகில் இரண்டு சிங்கங்களும் அமர்ந்தபடி இருந்துள்ளன. இதனால் அவரின் உடலை அதிகாரிகளால் எடுக்க முடியாததால், அந்த இரண்டு சிங்கங்களையும் துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டு அவரின் உடலை எடுத்துள்ளனர்.

இவர் சிங்கங்கள் வளர்க்க ஏற்கனவே அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக அவர் அபராதமும் செலுத்தியுள்ளார்.

விலங்குகள் நலம் தொடர்பான செக் குடியரசின் சட்டங்களின்படி, எந்த விலங்குகளையும் கட்டாயப்படுத்தி அப்புறப்படுத்தக்கூடாது என்பதால், அவை வேறு இடத்துக்கும் மாற்றப்படவில்லை என்று அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers