பாகிஸ்தானின் திடீர் நடவடிக்கை: உலக நாடுகளின் நெருக்கடி

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அஸாரின் மகன் உட்பட 44 பேரை பாகிஸ்தான் அரசு கைது செய்துள்ளது.

எல்லை தாண்டிய தீவிரவாதத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் நாட்டுக்கு உலக நாடுகள் தொடர் நெருக்கடி கொடுத்து வருகின்றன.

இதன் காரணமாக பாகிஸ்தான் திடீர் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. தீவிரவாதிகளுக்கு வரும் நிதியுதவியை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறிய அரசு, இன்று ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் அசாரின் சகோதரர் முப்தி , ஹம்மாத் அசாத் உள்ளிட்ட 44 பேரை கைது செய்துள்ளது.

இந்த தகவலை பாகிஸ்தான் ஒலிபரப்புத்துறை அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுபோன்ற கைது நடவடிக்கை இரண்டு வாரங்களுக்கு தொடரும் என்றும் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக கிடைக்கும் ஆதாரங்களை வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்