இந்தியா சொன்னது எல்லாமே பொய்யா? பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தியதற்கு ஆதாரமே இல்லை: வெளியான செயற்கை கோள் புகைப்படம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

பாகிஸ்தானில் இந்தியா தாக்குதல் நடத்தியதற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்று பிரபல செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்மாவா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகியதால், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய இராணுவம் பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் தீவிரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியது.

இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் இறந்துவிட்டதாகவும் கூறப்பட்டது. அதன் பின் இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தான் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

மேலும் இந்தியா தாக்குதல் நடத்தியதற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்று கருத்தும் நிலவி வருகிறது. ஆனால் இந்திய பிரதமர் மோடியோ பாகிஸ்தானின் பால்கோட் பகுதியில் இருக்கும் தீவிரவாதிகள் முகாமில் அழிக்கப்பட்டதாக கூறி வருகிறார்.

இந்நிலையில் பிரபல சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் பாகிஸ்தானில் இந்தியா தாக்குதல் நடத்தியதற்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்று தனியார் செயற்கை கோள் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.

அதில், பாலகோட் அருகே இஸ்லாமிய மத பயிற்சி பள்ளியான மதரசா அமைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாலகோட்டில் தீவிரவாதிகள் முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக பிரதமர் மோடி கூறிவருகிறார்.

ஆனால் இந்த செய்ற்கை கோள் படங்கள் அவரின் கூற்றை பொய்யக்கவது போன்று இந்த புகைப்படங்கள் உள்ளதாக ராய்ட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாலகோட்டில் தீவிரவாதிகள் முகாம்கள் இல்லை எனவும் அங்குள்ள மதரசா பள்ளியும் எந்த ஒரு சேதாரமும் அடையவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது.

மதரசா பள்ளியின் மொத்தம் 6 கட்டிடங்களில் எதுவும் சேதமடையவில்லை, அங்கிருக்கும் மரங்கள் கூட முறியவில்லை என்று தெரிவித்துள்ளது.

இந்த மதரசா பள்ளியை ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்தியாவின் தாக்குதல் குறித்து சந்தேகம் கிளம்பி வரும் நிலையில், இப்போது இப்படி ஒரு தகவல் வெளியாகியுள்ளது, சந்தேகம் மேலும் வலுத்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்