பாகிஸ்தான் படைகளிடம் அபிநந்தன் பிடிபடுவதற்கு முன்னர் கடைசியாக பேசியது என்ன தெரியுமா? வெளியான தகவல்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

பாகிஸ்தான் படைகளிடம் பிடிபடுவதற்கு முன்னர், ’R73 தேர்வு செய்யப்பட்டு விட்டது’ என்பது தான் அபிநந்தன் அனுப்பிய கடைசி ரேடியோ செய்தி என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த புதன்கிழமை அன்று, பாகிஸ்தான் விமானப்படையின் F16 ரக போர் விமானங்கள் இந்திய வான்பரப்பில் அத்துமீறி நுழைந்தன.

மிக் 21 பைசன் போர் விமானத்தில் சென்ற விங் கமாண்டர் அபிநந்தன் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி வான் பரப்பில் அவற்றை இடைமறித்தார்.

அப்போது வானில் நடைபெற்ற சண்டையில் F16 விமானத்தால், மிக் 21 பைசன் விமானத்துக்கு சிக்கல் ஏற்படவே, விய்ம்பெல் R 73 ரக ஏவுகணையை அபிநந்தன் பயன்படுத்தி, பாகிஸ்தானின் F16 விமானத்தை வீழ்த்தினார்.

R 73 ஏவுகணையை அவர் தேர்வு செய்த தகவல் தான், கடைசியாக மிக் 21 பைசன் விமானத்தில் இருந்து அனுப்பப்பட்ட கடைசி ரேடியோ செய்தி ஆகும். இதன் பிறகு, தனது விமானமும் எதிரி நாட்டின் எல்லையில் வீழ்ந்துவிட பாராசூட் மூலம் குதித்த அபிநந்தன் பாகிஸ்தான் படைகளிடம் சிக்கிக் கொண்டார், அதன் பின்னர் அவர் நேற்று முன் தினம் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்