அபிநந்தன் வாகா எல்லைக்கு வந்த போது மக்கள் இப்படியா செய்தார்கள்? வெளியான வீடியோவால் அதிர்ச்சி

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

அபிநந்தன் பாகிஸ்தான் பிடியிலிருந்து இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்ட தருணம் பெரிய திரையில் ஒளிபரப்பப்பட்டதோடு அதை பார்த்த மக்கள் கத்தி ஆரவாரம் செய்வது போன்ற வீடியோ வெளியான நிலையில் அது போலியான வீடியோ என தெரியவந்துள்ளது.

தமிழகத்தை சேர்ந்த இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டார்.

வாகா எல்லைக்கு கொண்டு வரப்பட்ட அபிநந்தன் அங்கிருந்த இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்நிலையில் இந்த நிகழ்வானது பெரிய திரையில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது போலவும், அந்த இடத்தில் குழுமியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் அபிநந்தன் முகத்தை பார்த்தவுடன் மகிழ்ச்சியில் கத்தி ஆரவாரம் செய்வது போலவும், உணவுகளை தூக்கி போடுவது போலவும் ஒரு வீடியோ டுவிட்டரில் வைரலானது.

ஆனால் இந்த வீடியோ போலியாக மார்பிங் செய்யப்பட்டது என தற்போது தெரியவந்துள்ளது.

அதாவது பெரிய திரையில் உண்மையில், 2016ல் நடந்த கால்பந்து இறுதி ஆட்டம் ஒளிபரப்பானது. அதில் கால்பந்து வீரர் கோல் போட்டதற்கு மக்கள் ஆரவாரம் செய்துள்ளனர்.

ஆனால் இதை யாரோ அபிநந்தனுக்கு ஆரவாரம் செய்தது போல மார்பிங் செய்து வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ மூலம் உண்மை வெளியானது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வீடியோவை வெளியிட்டவர் பா.ஜ.க கட்சியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்