பறக்கும் விமானத்தில் பயணிகளை வேவுபார்த்த ரகசிய கமெரா: பகீர் சம்பவம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

பறக்கும் விமானத்தில் பயணிகளின் நடவடிக்கைகளை பதிவு செய்யும் ரகசிய கமெராக்களை கண்டுபிடித்த சுற்றுலா பயணிகளால் குறித்த விவகாரம் பூதாகரமாகியுள்ளது.

சர்வதேச அளவில் பிரபலமான இரு விமான சேவை நிறுவனங்களின் விமானங்களில் ரகசிய கமெரா பொருத்தப்பட்டிருந்ததை வாடிக்கையாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

யுனைடெட் ஏர்லைன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களில் இந்த ரகசிய கமெராக்கள் பொருத்தப்பட்டிருந்ததை அந்த நிறுவனங்கள் ஒப்புகொண்டுள்ளது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் மேற்கொண்ட Vitaly Kamluk என்ற பயணி கடந்த வாரம் முதன் முறையாக இதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

கமெரா போன்ற ஒரு பொருள் தாம் பார்த்ததாகவும், விமானம் தொடர்பில் அதிகம் தெரிந்தவர்கள் இதை விளக்க வேண்டும் எனவும் அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

இவரது இந்த பதிவானது சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளதுடன், கடும் விவாதத்திற்கும் வித்திட்டது.

ஆனால் இந்த விவகாரம் தொடர்பில் விளக்கமளித்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிர்வாகம்,

அந்த கமெராக்கள் பொருத்தப்பட்ட காலம் தொடங்கி இதுவரை ஓன் செய்யவில்லை எனவும், அது உளவு பார்க்கும் நோக்கில் பொருத்தப்பட்டவை அல்ல எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்