இரவு நேரத்தில் இந்தியாவின் கோழைத்தனமான தாக்குதல்.... பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தி

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

இன்று காலை இந்திய விமானப்படை குண்டு மழைகளை பொழிந்து தீவிரவாத முகாம்களை அழித்துள்ளது குறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் பல்வேறு செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன.

ரேடியோ பாகிஸ்தான்

பாகிஸ்தானின் முன்னணி வானொலி சேவை நிறுவனமான 'ரேடியோ பாகிஸ்தான் வெளியிட்டுள்ள செய்தியில், இரவு நேரத்தில் இந்திய விமானப்படை கோழைத்தனமாக தாக்குதல் நடத்தியதை முறியடித்த பாகிஸ்தான் விமானப்படை, அவர்களை விரட்டியடித்தது.

பாகிஸ்தானை சீண்டும் வகையிலான போக்கை இந்தியா நிறுத்தாவிட்டால், தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று விவகாரத்துறை இணை அமைச்சர் அலி முகம்மது கான் தெரிவித்துள்ளார் என செய்தி வெளியிட்டுள்ளது.

தி எக்ஸ்பிரஸ் ட்ரைபியூனின்

தேர்தலில் வெற்றிபெறுவதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோதி பிராந்திய அமைதியை குலைக்க கூடாது. பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதலுக்கான இழப்பை சந்திக்க இந்தியா தயாராக இருக்க வேண்டும்" என்று பாகிஸ்தான் மக்கள் கட்சியின் துணைத் தலைவரான ஆசிப் அலி சர்தாரி தெரிவித்துள்ளதாக தி எக்ஸ்பிரஸ் ட்ரைபியூனின் செய்தி வெளியிட்டுள்ளது.

டான்

பாகிஸ்தானின் வான் எல்லைக்குள் நுழைந்து இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது தொடர்பாக விவாதிப்பதற்காக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவசர கூட்டத்தை கூட்டியுள்ளதாக பாகிஸ்தானின் முன்னணி ஊடகமான டான் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்