போர் நிறுத்தத்தை மீறி இந்திய எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்! பரபரப்பு தகவல்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

இந்திய எல்லையில் பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை மீறி தற்போது தாக்குதல் நடத்தி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய விமான படையினர் இன்று அதிகாலை நடத்திய தாக்குதலில் ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத இயக்கத்தின் முகாம் அழிக்கப்பட்டது.

இதில் 300 தீவிரவாதிகள் உயிரிழந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன, இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தற்போது போர்நிறுத்தத்தை மீறி, தாக்குதல் நடத்தி வருவதாக தெரியவந்துள்ளது.

போர்நிறுத்த உடன்பாட்டை மீறி நவ்ஷேரா நகரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக இந்திய அரசு சார்பில் பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் 5 அடுக்க பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது.

அஹ்னூர் என்ற பகுதியில் அத்துமீறி நடந்த தாக்குதலில் பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்