தலைவலியாக இருந்த தீவிரவாதிகள் முகாம்! இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த ஆப்கானிஸ்தான்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

பாகிஸ்தானின் தீவிரவாதிகள் முகாமில் இந்தியா நடத்திய அதிரடி தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் நன்றி தெரிவித்துள்ளது.

இந்தியாவின் ஜம்முகாஷ்மீர் மாநிலத்தின் புல்மாவா மாவட்டத்தில் நடந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று அதிகாலை பாகிஸ்தான் பகுதியில் இருக்கும் தீவிரவாதிகள் முகாம் மீது அதிரடி தாக்குதல் நடத்தியதால் தீவிரவாதிகளின் சொர்க்கபுரியாக பார்க்கப்பட்ட பலாகோட் பகுதி முற்றிலும் அழிந்தது.

பாகிஸ்தானில் இராணுவ ஆட்சி இருந்த போது, அப்போது பதவி வகித்த ஷியா உல் ஹக் மலையுச்சியில் அடர்ந்த வனப்பகுதிகளில் தீவிரவாதிகள் பதுங்கி தங்கள் நடவடிக்கைகளை தொடங்கினர்.

அவர் தீவிரவாதிகளுக்கு முழுமையான ஆதரவு அளித்ததால், அது தீவிரவாதிகளின் பயிற்சி முகாம், பதுங்குழிகள், ஆயுத குடோன்களாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

ஷியா உல் ஹக் இறந்த போதும் இந்த பகுதியை தீவிரவாதிகள் முடிந்தளவிற்கு தங்கள் கட்டுப்பாட்டிலே வைத்துள்ளனர். அதுமட்டுமின்றி . இங்கிருந்து தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானுக்கு எளிதாக செல்ல முடியும் என்பதால், இதை யாரும் கைப்பற்றி விடக்கூடாது என்பதிலும் கவனமாக இருந்தனர்.

இது ஆப்கானிஸ்தானுக்கு மிகப் பெரிய தலைவலியாக இருந்து வந்தது.

இந்நிலையில் இன்று இந்தியா நடத்திய இந்த தாக்குதலால் ஆப்கானிஸ்தான் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளது.

இது குறித்து ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் முன்னாள் செய்தி தொடர்பாளர் தவாப் கோர்சாங் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், பாகிஸ்தானின் பால்கோட் மன்ஷோரா பகுதியில் தீவிரவாத முகாமை தகர்த்த இந்திய விமானப்படைக்கு நன்றி.

அந்தப் பகுதி தீவிரவாதிகளின் பயிற்சி முகாம்கள் நிறைந்த பகுதி என பரவலாக அறியப்பட்ட இடம். ஷியா உல் ஹக் காலத்தில் இருந்தே அந்தப் பகுதியில் தீவிரவாதிகள் செயல்பட்டு வருகின்றனர். இது தீவிரவாதிகளுக்கெதிரான நடவடிக்கை மட்டுமே, வேறொன்றும் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்