தீவிரவாதிகள் முகாமில் இந்தியா நடத்திய தாக்குதல்.. பரபரப்பான சூழலில் பாகிஸ்தான் எடுத்துள்ள அதிரடி முடிவு

Report Print Santhan in ஏனைய நாடுகள்

பாகிஸ்தான் பகுதியில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலைப் பற்றி பாகிஸ்தான் ஐ.நா சபையிடம் முறையிட முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் எல்லைக்குள் இன்று அதிகாலை புகுந்து இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் சுமார் 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக இந்தியாவின் ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகளின் முகாம் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாகவும், இதை சேர்த்து 4 முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இப்படி இந்தியா திடீரென்று நடத்திய தாக்குதலால் பாகிஸ்தான் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. இதனால் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன எடுப்பது என்பது குறித்து பாகிஸ்தான் ஆலோசனை செய்து வருகிறது.

மேலும் பாகிஸ்தான் வெளியுறத்துறை அமைச்சர் குரேஷி இந்தியா பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல் குறித்து ஐநாவின் கவுன்சிலில் புகார் அளிக்க உள்ளதாகவும், இது காலையில் குரேஷி நடத்திய ஆலோசனையின் முடிவில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி பாகிஸ்தான் தன்னுடைய நெருங்கிய நட்பு நாடுகளுக்கும்சீனா, சவுதி ஆகிய நாடுகளிடம் தங்கள் மண்ணில் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து புகார் அளிக்க முடிவு செய்துள்ளது.

இது குறித்து சீனாவின் வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் லு காங் கூறுகையில், இந்த பிரச்சனையை நாங்கள் கவனித்து கொண்டு தான் வருகிறோம்.

தெற்கு ஆசியாவில் இந்தியாவும், பாகிஸ்தானும் மிக முக்கியமான நாடுகள். இரண்டு நாடுகளுக்கு இடையிலான நட்பும், புரிந்துணர்வும் தான் ஆசியாவில் நிலையான அமைதிக்கு வழி வகுக்கும்.

இந்தியாவும் பாகிஸ்தானும் சேர்ந்து இருக்க வேண்டும், இல்லையென்றால் பிரச்சனை ஏற்படும். இரண்டு நாடுகளும் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை சேர்ந்து எடுக்க வேண்டும். நீங்கள் இருவரும் ஒற்றுமையாக இருப்பதே பலரின் நோக்கம் என்று கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்