இந்தியாவின் தாக்குதலை நேரில் பார்த்த பாகிஸ்தானியர்! அவர் சொன்ன பல அதிரவைக்கும் தகவல்கள்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

இந்தியாவின் ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய இராணுவம் இன்று அதிகாலை தீவிரவாதிகளின் முகாம் மீது நடத்திய தாக்குதலினால் சுமார் 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தீவிரவாதிகள் முகாம் மீது இந்தியா நடத்திய தாக்குதலை பாகிஸ்தானியர் ஒருவர் நேரில் பார்த்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், என்னுடைய பெயர் முகமது ஆதில், நான் ஒரு விவசாயி. சம்பவதினத்தன்று அதிகாலை 3 மணியளவில் ஒரு பயங்கரமான சத்தத்தைக் கேட்டோம்.

பூமி அதிர்வதைப் போல் இருந்தது. அதன் பிறகு எங்களால் தூங்க முடியவில்லை. அடுத்த ஒரு 5 நிமிடங்களில் அது ஒரு வெடிச்சத்தம் என்பதை உணர்ந்தேன்.

சம்பவம் நடந்த பகுதியில் என் உறவினர் வசிக்கிறார். அவரின் வீடு சேதமடைந்தது. ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. என் உறவினர்கள் அங்கு விமானங்கள் பறக்கும் சத்தம் கேட்டதாகவும், அதன் பின் வெடி வெடித்ததாகவும் கூறினார்.

அதன் பிறகு சில பாகிஸ்தானியர்கள் வந்தார்கள். காலை விடிந்தவுடன் அங்கு சென்றேன். மிகவும் ஆழமான பள்ளத்தைப் பார்த்தேன். நான்கு, ஐந்து வீடுகள் சேதமடைந்திருந்தன என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்