படுக்கையறையில் பிணமாக கிடந்த நடிகை! கொலையா, தற்கொலையா?

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

அர்ஜெண்டினா நடிகையும் பிரபல பிளேபாய் மொடலுமான ஒரு பெண் தனது படுக்கையறையில் நிர்வாணமாக இறந்து கிடந்தார்.

2018ஆம் ஆண்டு Natacha Jaitt (41) என்னும் அந்த மொடல், பல பிரபல விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் மற்றும் பெரிய அரசியல்வாதிகள் மீது சிறார் பாலியல் குற்றம் சாட்டியிருந்தார்.

அவர்களில் பலர் சிறுமிகளை பாலியல் தொழிலுக்கு பயன்படுத்துவது தொடர்பாக தன்னிடம் ஆதாரம் இருப்பதாக அவர் கூறியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதேபோல், தான் கொல்லப்படலாம் என்றும், சந்தேகத்திற்குரிய விதத்தில் தான் இறந்தால் அது தற்கொலையாக இருக்காது என்றும், இந்த பிரபலங்களின் மோசடிகளை வெளிப்படுத்தியதால் அவர்களால் செய்யப்பட்ட கொலையாகத்தான் இருக்கும் என்றும் அவர் ட்வீட் ஒன்றை பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவர் தனது படுக்கையறையில் நிர்வாணமாக, மூக்கில் போதைப்பொருளுடன் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உடற்கூறு பரிசோதனையில், Natacha, உடல் உள் உறுப்புகள் பல செயலிழந்த நிலையில், வெளிக்காயங்கள் எதுவுமின்றி இறந்திருந்தது தெரியவந்தது.

போதைப்பொருட்கள் உட்கொண்டதால் பக்க வாதம் ஏற்பட்டு அவர் உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

சமீப காலமாகவே தனக்கு மிரட்டல்கள் வருவதாகவும், தான் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டதாகவும் Natacha தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Natachaவின் சகோதரரும் வழக்கறிஞரும் அவரது உயிரிழப்பிற்கு காரணம் கொலையாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்