இந்திய ராணுவத்தினர் அழித்த தீவிரவாதிகள் முகாமில் பிரித்தானிய கொடி! வைரலாகும் புகைப்படம்

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

இந்திய ராணுவத்தினர் இன்று அதிகாலை தீவிரவாத முகாம் மீது தாக்குதல் நடத்திய நிலையில் அங்குள்ள படிக்கட்டுகளில் பிரித்தானியா மற்றும் அமெரிக்கா கொடி வரையப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது.

இந்திய விமான படையினர் இன்று அதிகாலை பாகிஸ்தானின் Balakot நகரில் நடத்திய தாக்குதலில் ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத இயக்கத்தின் முகாம் அழிக்கப்பட்டது.

இதோடு வெடி பொருட்கள் சேமிப்பு கிடங்கும் அழிக்கப்பட்டது.

இந்நிலையில் அந்த கிடங்கு உள்ள கட்டிடத்தின் படிக்கட்டுகளில் பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் தேசிய கொடிகள் வரையப்பட்டுள்ளது.

இந்த நாடுகளின் கொடிகள் அங்கு ஏன் வரையபட்டது என தெரியாத நிலையில் இது குறித்த புகைப்படம் வைரலாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்