டிரம்ப்-கிம் இடையேயான சிறப்பு வாய்ந்த 2வது சந்திப்பு.. உச்சகட்ட பாதுகாப்பில் வியட்நாம்!

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் இடையேயான இரண்டாவது சந்திப்பு நாளை நடைபெற உள்ள நிலையில், வியட்நாம் நாடு உச்ச கட்ட பாதுகாப்புடன் தயாராகியுள்ளது.

டொனால்டு டிரம்ப்-கிம் ஜாங் உன் இருவரும் சந்தித்து பேசும் 2வது உச்சி மாநாடு, வியட்நாமில் இம்மாதம் 27, 28 ஆகிய திகதிகளில் நடக்கிறது. ஹனோய் நகரில் நடக்கும் இந்த சந்திப்புக்காக, கிம் ஜாங் உன் 24ஆம் திகதி மாலை சீனாவின் பியாங்காங் நகரில் இருந்து சிறப்பு ரயிலில் புறப்பட்டார்.

ரயில் பயணம் மூலம் இரண்டரை நாட்கள் பயணம் செய்த கிம் ஜாங் உன் வியட்நாமை அடைந்தார். அதனைத் தொடர்ந்து, சந்திப்பு நடக்க உள்ள ஹனோய் நகருக்கு கார் மூலமாக பயணம் மேற்கொண்டுள்ளார்.

AP

அவரது சகோதரி கிம் யோ ஜாங் மற்றும் உதவியாளர் கிம் யோங் சோள் உட்பட உயர் அதிகாரிகளும் கிம் ஜாங் உன்-வுடன் செல்கின்றனர். அதேபோல் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பும் விமானம் மூலமாக கிம்மை சந்திக்க வியட்நாம் புறப்பட்டுள்ளார்.

முன்னதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட டிரம்ப், வடகொரிய ஜனாதிபதியுடன் ஆக்கப்பூர்வமான சந்திப்பை எதிர்நோக்குவதாக தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், இரு நாட்டு தலைவர்கள் சந்தித்து பேசும் முக்கியமான சந்திப்பு என்பதால், டோங் டாங் நகரில் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

MINH HOANG/AP

Nhac Nguyen/AFP/Getty Images

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்