இந்தியாவின் கனவு ஒருபோதும் நிறைவேறாது: பாகிஸ்தான்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

பாகிஸ்தான் நாட்டை தனிமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வரும் இந்தியாவின் கனவு ஒருபோதும் நிறைவேறாது என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகம்மது குரேசி தெரிவித்துள்ளார்.

40 இராணுவ வீரர்களின் உயிரிழப்பால் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு இருந்த அனுகூலமான நாடு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்தது.

இந்நிலையில் கருத்தரங்கு ஒன்றில் பேசிய அமைச்சர் ஷா முகம்மது கூறியதாவது, 23ம் தேதி நடைபெறும் பாகிஸ்தான் தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பல்வேறு நாட்டை சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள் வரவிருக்கிறார்கள்.

ஐரோப்பிய யூனியனின் உயர் பிரதிநிதி விரைவில் இஸ்லாமாபாத் வர இருக்கிறார். எனவே, பாகிஸ்தானை தனிமைப்படுத்த நினைக்கும் இந்தியாவின் கனவு ஒருபோதும் நிறைவேறப்போவது இல்லை என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்