இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதல்! மொத்தம் எத்தனை தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளார்கள் தெரியுமா?

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாமை இந்திய விமானங்கள் குண்டுகள் வீசி அழித்த நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த 200-லிருந்து 300 தீவிரவாதிகள் வரை உயிரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பல்லோட், சாகோட்டி, முசாபராபாத் பகுதிகளில் இந்திய போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன.

இந்தியாவின் மிராஜ் வகை போர் விமானங்கள் அதிகாலையில் பாகிஸ்தானுக்குள் நுழைந்து அதிரடி தாக்குதல் நடத்தியது.

இதில் இந்திய விமானிகள் பாதுகாப்பாக இருப்பதாக தெரியவந்துள்ளது

மேலும், பாகிஸ்தானை சேர்ந்த 300 தீவிரவாதிகள் வரை இந்த தாக்குதலில் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்