வெளிநாட்டில் இலங்கையை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக பலி: விபத்துக்கான காரணம் வெளியானது

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

ஓமனில் நடந்த சாலை விபத்தில் நான்கு இலங்கையர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ள நிலையில் அவர்களின் பெயர் விபரங்கள் தெரியவந்துள்ளது.

ஓமனில் வசிக்கும் இலங்கையை சேர்ந்த 7 பேர் கொண்ட குடும்பம், நாட்டின் மலைப்பாங்கான அல் ஜபல் அல் அஹ்தார் என்ற பிரதேசத்தில் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது.

இதில் சம்பவ இடத்திலேயே மூன்று சிறுவர், சிறுமிகள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அல்பாத்திமியா வீதியைச் சேர்ந்த முஹம்மது அபூபக்கர் காமிலா (40), அவரது மகள்களான நவால் (14), ஹபாப் (9) ஆகியோரும் உடன் சென்ற சிறுவன் பாதிக் (6) ஆகியவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் சிக்கிய பிரபல கணக்காளர் சக்கியும் அவரது மகனான அமூத் மற்றும் இன்னொரு சிறுவனும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

முதற்கட்ட விசாரணையில் இலங்கை குடும்பம் சென்ற வாகனத்தின் பிரேக் ஒயரில் பிரச்சனை இருந்த காரணத்திலேயே இவ்விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்