வடகொரிய ஜனாதிபதி தனது உறவினரை கொன்றது எப்படி? நடுங்க வைக்கும் தகவல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் தமது ஆட்சிக்கு அச்சுறுத்தலாக இருந்தவர்கள் மீது எவ்வாறு நடந்து கொண்டார் என்பது தொடர்பில் பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

ஹிட்லரின் யூத வெறுப்பு சித்திரவதைகளை விடவும் கொடூரமானதாக வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் தமது எதிராளிகளை நடத்தியதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

கிம் ஜாங் உன் உறவினரான ஜங் சாங்-தாக் என்பவருக்கு மிகவும் வேணிடிய இருவர் வழக்கு ஒன்றில் சிக்கியுள்ளனர்.

அந்த இருவரின் வாயில் இரும்பு கம்பிகளை திருகி அவர்களை சித்திரவதை செய்துள்ளனர்.

மட்டுமின்றி அவர்கள் கொல்லப்படுவதை ஜங் சாங்-தாக் நேரிடையாக காண வேண்டும் என கிம் ஜாங் உன் உத்தரவு பிறப்பித்திருந்ததாக 2013 ஆம் ஆண்டு வடகொரியாவில் இருந்து ரகசியமாக வெளியேறிய நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி அதே வழக்கில் கைது செய்யப்பட்ட ஜங் சாங்-தாக், விமானங்களை சுட்டு வீழ்த்தும் சக்தி வாய்ந்த துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

மட்டுமின்றி ஜங் சாங்-தாக் உடன் நெருங்கிய நட்பு பாராட்டிய சிலரையும் கிம் ஜாங் உன் தீயிட்டு உயிருடன் கொளுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும் ஒரு பொலிஸ் அதிகாரியும் அவரது இளம் மனைவியும் பொதுவெளியில் நிர்வாணமாக்கப்பட்டு வேட்டை நாய்களை விட்டு கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

இதுவரை வெளியாகாத இந்த தகவல்கள் மனித உரிமை அத்துமீறல்கள் தொடர்பாக விவகாரத்தை கிளப்பும் என கூறப்படுகிறது.

அணு ஆயுதங்கள் மிகுந்த சூழலில் தங்களது பிள்ளைகள் வளர்வதை தாம் விரும்பவில்லை என கூறும் கிம் ஜாங் உன்,

உண்மையில் அமெரிக்காவிடம் பொய் கூறுவதாகவும், ஏமாற்றுவதாகவும் முன்னால் சி.ஐ.ஏ அதிகாரி ஒருவர் தற்போது குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

இதனிடையே எதிர்வரும் வியாழனன்று கிம் ஜாங் உன் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை இரண்டாவது முறையாக சந்தித்து பேச இருக்கிறார்.

வியட்நாம் நாட்டில் இருவரும் சந்தித்து பேசும் உச்சிமாநாடு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்