மூக்கை துண்டாக்கிய காதலன்.. மன்னித்துவிட்ட காதலியை கொன்று சடலத்துடன் 2 நாட்களாக வசித்த நபர்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

காதலனை சிறையில் அடைக்க வேண்டாம் என நீதிபதியிடம் கெஞ்சிய காதலியை சுத்தியலால் அடித்து கொன்ற இளைஞரை பொலிஸார் சிறையில் அடைத்துள்ளனர்.

ரஷ்யாவை சேர்ந்த Myshadaev என்கிற இளைஞர் இரவு நேர கேளிக்கை விடுதிக்கு சென்றிருந்த போது, மது போதையில் தன்னுடைய காதலியை தாக்கிவிட்டு மூக்கை கடித்து துண்டாக்கியுள்ளார்.

2017-ம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் குறித்த வழக்கு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது காதலனை சிறையில் அடைத்து விட வேண்டாம் என அவருடைய காதலி ஒலெக் மிஷாதேவ் (20), நீதிபதியிடம் கெஞ்சினார்.

இதனை கேட்ட நீதிபதி தண்டனை விவரத்திற்கான திகதியினை தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இரவு நேரத்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு மிஷாதேவ் உறங்க சென்றுவிட்டார்.

ஆனால் ஆத்திரம் தீராத Myshadaev, மது அருந்திவிட்டு போதையில் சுத்தியலால் காதலியை அடித்து கொலை செய்துள்ளார்.

சம்பவம் அறிந்து வந்த பொலிஸார், வீடு முழுவதும் ரத்தம் படிந்திருக்க சடலமாக கிடந்த மிஷாதேவை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் Myshadaev-வை கைது செய்த பொலிஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் 2 நாட்களுக்கு முன்பே கொலை செய்துவிட்டு சடலத்தை தன்னுடனே வீட்டில் வைத்திருந்தது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து கூறிய பொலிஸார், Myshadaev, மீதான தண்டனை உறுதி செய்யப்பட்டால் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது எனக்கூறியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...