பாகிஸ்தானுக்கு பகிரங்க ஆதரவு அளிக்கும் சவுதி அரேபியா? 20 பில்லியன் டொலருக்கு ஒப்பந்தம்

Report Print Deepthi Deepthi in ஏனைய நாடுகள்

புல்வாமா தற்கொலைப்படை தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்களின் உயிரிழப்பால் இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே பிரச்சனை நிலவி வருகிறது.

காஷ்மீரில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஆதரவு இருக்கும் என உலக நாடுகள் குற்றம்சாட்டியதோடு மட்டுமல்லாமல் இந்தியா தாக்குதல் நடத்தினால் ஆதரவு அளிப்போம் என அமெரிக்கா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், சவுதி அரேபிய இளவரசர் சல்மான், பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

அந்நாட்டு அரசுடன் 20 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான 8 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.

காஷ்மீர் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி என குறைத்து இந்திய அறிவித்த காரணத்தால் பாகிஸ்தானின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சவுதி அரேபியாவின் இந்த ஒப்பந்தங்கள் பெருமளவு உதவும் என கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி சவுதி அரேபியாவுக்கு பாகிஸ்தான் நெருக்கமான நாடு என்றும், பாகிஸ்தானுடன் உறவு தொடரும் என்றும் சவுதி இளவரசர் அறிவித்துள்ளார்.

சவுதி அரேபியா இளவரசரின் இந்த அறிவிப்பு பாகிஸ்தான் நாட்டின் தீவிரவாத செயலுக்கு ஆதரவு அளிப்பது போல் இருப்பதாக கருதப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...