ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகள் பெற்ற தாய்: மத்திய கிழக்கு நாடுகளில் இது முதல் முறை

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

ஈராக்கில் ஒரு இளம்பெண் ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகளைப் பெற்றிருக்கிறார், அதுவும் சுகப்பிரசவம்.

ஆறு பெண் குழந்தைகளையும் ஒரு ஆண் குழந்தையையுயும் பெற்ற அந்த 25 வயது பெண்ணும் அவளது குழந்தைகளும் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

தம்பதிகளுக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் இருக்கும் நிலையில், குழந்தைகளின் தந்தையான யூசுஃப் தாங்கள் தங்கள் குடும்பத்தை பெரிதாக்க திட்டம் எதுவும் வைத்திருக்கவில்லை என்றும், ஆனால் இப்போது பத்து குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது என்றும் கூறியுள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளிலேயே இப்படி ஒரு பெண் சுகப்பிரசவத்தில் ஏழு குழந்தைகளை

பெற்றெடுப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers