இந்தியாவில் தீவிரவாதிகள் நடத்திய வெறித்தாக்குதல்! அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா நாடுகள் என்ன சொல்கிறது?

Report Print Santhan in ஏனைய நாடுகள்

இந்தியாவில் ஜம்மு-காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் போன்ற உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் 2 ஆயிரத்து 547 பேர் ஜம்முவில் இருந்து, 78 வாகனங்களில் பள்ளத்தாக்கு பகுதிக்கு நேற்று சென்று கொண்டிருந்த போது, தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதில் காயமடைந்த பலரின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.

இதையடுத்து இந்த தாக்குதலுக்கு ரஷ்யா ஜனாதிபதி புடின் இந்த தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது. இது போன்ற செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதே போன்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங் இந்த தாக்குதல் கண்டனத்திற்குரியது, உயிரிழந்த குடும்பத்தினருக்கு தன்னுடைய இரங்கலை தெரிவித்தார்.

அதேபோல், பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு நேபாள பிரதமர் ஷர்மா ஒலியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வீரர்கள் உயிரிழப்புக்கு பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.

வங்கதேசம், பூடான், மாலத்தீவு, ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளும் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளன.

ஜெர்மனி, இஸ்ரேல் உள்ளிட்ட பல நாடுகளும் தீவிரதாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த தாக்குதல் மிகவும் கவலைக்குரியது.

இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். விசாரணை நடத்தாமலே இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் மீது பழி போடும் இந்திய அரசு மற்றும் இந்திய ஊடகங்களின் கருத்துக்களை நிராகரிக்கிறோம். இதற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது.

ஆனால் பயங்கரவாத செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வரும், ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத் தலைவர் மசூத் ஆசாருக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்து வருகிறது.

இதைச் சுட்டிக்காட்டி இந்தியா தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்த தாக்குதலுக்கும் அந்த அமைப்பே பொறுப்பேற்றிருப்பதால், இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers