குளிர்சாதன பெட்டியில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட ஆணின் சடலம்: அதிர்ச்சியை ஏற்படுத்திய 80 வயது பெண்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் 80 வயது பெண்மணியின் சமையலறை குளிர்சாதன பெட்டியில் இருந்து துண்டு துண்டாக வெட்டப்பட்ட ஆணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக அவரை கைது செய்ய பொலிசார் கடுமையாக போராடியுள்ளனர்.

ரஷ்யாவின் புறநகர பகுதி ஒன்றில் சம்பவத்தன்று தெருவில் நாய் ஒன்று மனித கை ஒன்றை கவ்விக் கொண்டும் தின்றபடியே இருந்துள்ளது.

இதை கவனித்த அப்பகுதி சிறார்கள், உடனடியாக பெரியவர்களிடம் தெரிவித்துள்ளனர். சம்பவத்தை உறுதி செய்த அவர்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார் அப்பகுதியில் மேற்கொண்ட விசாரணையில், வாஸ்லி ஷிலிஹாட்டிக் என்ற 52 வயது நபர் சமீபத்தில் மாயமானது பொலிசாருக்கு தெரியவந்தது.

தொடர்ந்து அவர் வாடகைக்கு குடியிருக்கும் அறைக்கு சென்ற பொலிசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அங்குள்ள குளிர்சாதன பெட்டியில் குடல் உள்ளிட்ட உறுப்புகள் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதை பொலிசார் கண்டறிந்தனர்.

இதனையடுத்து நடந்த விசாரணையில் அந்த குடியிருப்பின் உரிமையாளரான 80 வயது பெண்மணி மீது பொலிசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

அவரை கைது செய்ய எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்த நிலையில் 5 பேர் கொண்ட பொலிஸ் குழு அவரை வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர்.

குறித்த பெண்மணி, பன்றிகளை உணவுக்காக வெட்டும் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.

சமீபத்தில் அவரது குடியிருப்பில் இருந்து கனமான பொருளை வெட்டும் சத்தம் இரவு தாண்டியும் கேட்டுள்ளதாக அப்பகுதி மக்களில் சிலர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி அப்பகுதியில் இருந்து இதுவரை ஒரு பெண் உள்ளிட்ட 7 பேர் மாயமானதாக கூறப்படுகிறது.

ஆனால் அதற்கும் கைதான பெண்மணிக்கும் தொடர்பு உள்ளனவா என்பது குறித்து விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers