இந்தோனேஷியாவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக போடப்பட்டிருந்த மேடை, திடீரென்று உடைந்து விழுந்ததால் மாப்பிள்ளை மற்றும் மணமகள் கால்வாயின் உள்ளே விழுந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்தோனேஷியா தலைநகர் Jakarta-வில் இருக்கும் Cengkareng பகுதியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை புதுமணத்தம்பதிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணம் நடைபெற்ற கையோடு வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றுள்ளது. இதனால் அங்கிருக்கும் கால்வாயின் மீது மரக்கட்டைகளால் மேடை போட்டுள்ளனர்.
இதையடுத்து அந்த மேடையில் மணமகன்-மணமகள் மற்றும் உறவினர்கள் நின்று கொண்டிருந்த போது, தீடீரென்று மேடை சரிந்து விழுந்ததால், இரண்டு பேரும் கீழே இருந்த சாக்கடை தண்ணீரின் உள்ளே விழுந்தனர்.
Musibah bisa datang kapan saja dan dimana saja..
— Kent Aro¢k'ers (@RockersPantura) February 11, 2019
Penganten nyemplung ke Kali😭 pic.twitter.com/n8U5ASaZ78
இதில் மணமகள் மேல வர முடியாமல் தவித்ததால், அவரை உறவினர்கள் போராடி மேலே கொண்டு வந்தனர்.
இதனால் அவர்களின் திருமண உடை மோசமாகியது. அதன் பின் அங்கிருந்த நபர்களாக மீட்கப்பட்ட அவர்கள் எந்த வித காயமுமின்றி காப்பாற்றப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார் இந்த சம்பவம் குறித்து கூறுகையில், சம்பவ தினத்தன்று Hartini-Alan ஜோடிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.
அப்போது வரவேற்பு நிகழ்ச்சிக்காக கால்வாயின் மீது போடப்பட்டிருந்த மேடை சரிந்து விழுந்துள்ளது. இதில் யாருக்கும் பெரிய அளவு காயம் ஏற்படவில்லை என்றும், அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் கூறியுள்ளனர்.