லொட்டரியில் வென்ற பணத்தைப் பெற முகமூடி அணிந்து வந்த நபர்! ஏன் தெரியுமா?

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

ஜமைக்காவைச் சேர்ந்த ஒரு நபர், லொட்டரியில் கிடைத்த பரிசுப் பணத்தைப் பெற்றுக் கொள்வதற்காக முகமூடி அணிந்து மாறுவேடத்தில் வந்த சம்பவம் முக்கியச் செய்தியாகியுள்ளது.

ஜமைக்காவைச் சேர்ந்த A. Campbell என்பவருக்கு லொட்டரியில் 158.4 மில்லியன் டொலர்கள் பரிசாகக் கிடைத்தது.

ஆனால் அவர் அந்த பணத்தை பெற்றுக் கொள்வதற்காக லொட்டரி நிறுவனத்திற்கு செல்லவில்லை.

54 நாட்களுக்குப் பின்னரே அவர் தனது பரிசுப் பணத்தை பெற்றுக் கொள்வதற்காக சென்றார்.

அதுவும் சாதாரணமாக செல்லாமல், பிரபல திகில் படம் ஒன்றில் வரும் கதாபாத்திரம் ஒன்றைப்போல் முகமூடி அணிந்து, மாறு வேடத்தில் சென்றே அவர் அந்த பரிசுத்தொகையைப் பெற்றூக் கொண்டார்.

பணத்தாசை பிடித்த தனது உறவினர்களுக்கு தெரியக்கூடாது என்பதற்காகவே அவர் இவ்வாறு செய்ததாக தெரிவித்துள்ளார்.

பொதுவாகவே ஜமைக்கா போன்ற நாடுகளில் குற்றச் செயல்கள் அதிகம் நடப்பதாலும், நண்பர்களும் உறவினர்களும் பணத்திற்காக வந்து விடுவார்கள் என்பதற்காகவும் லொட்டரி பரிசு வெல்பவர்கள், உறவினர்களுக்கு தெரியாமல் பணத்தைப் பெற்றுச் செல்வது ஒரு வாடிக்கையாகவே மாறி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers