மனைவியின் முகத்திரையை கிழிப்பதற்காக உறவினர்களுக்கு மிகப்பெரிய விருந்து கொடுத்த நபர்!

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

வெனிசுலா நாட்டில் மனைவி தனக்கு செய்யும் துரோகத்தை வெளிப்படுத்துவதற்காக, கணவர் மிகப்பெரிய விருந்திற்கு ஏற்பாடு செய்திருக்கும் வினோத சம்பவம் நடந்துள்ளது.

வெனிசுலா நாட்டை சேர்ந்த ஒருவர், தன்னுடைய வீட்டில் மிகப்பெரிய விருந்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். அதனை ஏற்று உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் கூடி ஓய்வெடுத்து மகிழ்ச்சியாக பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது அந்த நபர் மைக்கில் பேச ஆரம்பித்தார். அவருக்கு அருகிலேயே அவருடைய காதலி டலியானா மீலேன் நின்று கொண்டிருந்தார்.

அங்கிருந்த அனைவருமே அவர் என்ன பேசப்போகிறார் என ஆவலாக காத்துக்கொண்டிருந்தனர். அப்போது அவர், அல்பர்ட்டோ சபோல்வரோ என்னுடைய நெருங்கிய 20 வருட நண்பன். ஒரு பொருளாதார நிபுணராகவும், வெனிசுலா ஜனாதிபதி நிகோலாஸ் மதுரோவுக்கு விசுவாசமான ஒரு காங்கிரஸாராகவும் இருந்து வருகிறான்.

அவனுக்கும் என்னுடைய மனைவிக்கும் ரகசிய தொடர்பு இருக்கிறது. அவர்கள் இருவரும் மெசேஜ் செய்து பேசியுள்ளனர் என செல்போனில் உள்ள மெசேஜ்களை உறவினர்களிடம் காட்டுகிறார்.

இதனை பார்த்ததும், வேகமாக டலியானா அதனை பறிக்க முயல்கிறார். ஆனால் அந்த நபர், அங்கிருந்த நீச்சல் குளத்தில் செல்போனை வீசி எறிகிறார்.

இந்த வீடியோ காட்சியானது தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்