பிரதமர் பதவி வேட்பாளர் பட்டியலில் பெயர் நீக்கம்! அதிர்ச்சியில் இளவரசி

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

தாய்லாந்து நாட்டின் பிரதமர் பதவி வேட்பாளர் பட்டியலில் இருந்து தனது பெயர் நீக்கப்பட்டதால், இளவரசி உபோல் ரதானா அதிர்ச்சியடைந்துள்ளார்.

தாய்லாந்தில் ராணுவ ஆட்சி நடந்து வருவதால் ஜனநாயக ஆட்சியை கொண்டு வர வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து பொதுத்தேர்தலை நடத்தும்படி, கடந்த மாதம் மன்னர் மகா வஜிரலோங்கோர்ன் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டார்.

இதன் காரணமாக அந்நாட்டில் அடுத்த மாதம் 24ஆம் திகதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தாய்லாந்து இளவரசி உபோல் ரதானா பிரதமர் பதவிக்கு போட்டியிடுவார் என திடீரென அறிவிக்கப்பட்டது.

ஆனால், அரசியலமைப்பு சட்டத்திற்கு இது எதிரானது எனக் கூறிய மன்னரும், இளவரசியின் சகோதரருமான மகா வஜிரலோங்கோர்ன் எதிர்ப்பு தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் இளவரசி உபோல் ரதானாவின் பெயர் இடம்பெறவில்லை.

அவரது பெயர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்ததால், இளவரசி உபோல் ரதானா அதிர்ச்சியடைந்துள்ளார்.

Athit Perawongmetha

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers